Tag: தூக்கிய
25 வயது இளைஞன் செய்த மோசமான காரியம்-தட்டி தூக்கிய ராணுவத்தினர்..!
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குரக்கொட நகரின் இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 671 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
சென்னையிருந்து வந்த யாழை சேர்ந்தவரை தட்டி தூக்கிய பொலிசார்-காரணம் இதுதானாம்..!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த […]
ரகசிய தகவலில் கிளிநொச்சயில் ஒருவரை சுத்து போட்டு தூக்கிய பொலிசார்..!{படங்கள்}
இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக அன்றைய தினம் 20.02.2024அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுர போலீசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்ப்பத்திசெய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார்சயிக்கில் ஒன்றும் என்பனவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதன் போது 82 லிட்டர் கசிப்பும் 880 லிட்டர் கோடாவும் சந்தேக நபரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய […]
விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}
விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர். இதன்போதே வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் […]
யாழில் வீட்டை சுத்து போட்டு இளைஞனை தூக்கிய பொலிசார்..!
நேற்றிரவு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் ஒராவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட போதூப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தல்காரருடன் கள்ள உறவில் இருந்த அழகியை தட்டி தூக்கிய பொலிசார்..!
பாரிய ஹெரோயின் கடத்தல்காரர் என பொலிஸாரால் அறியப்படும் ஷிரான் பாஷிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த வேளையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் குறித்த கடத்தல்காரருடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் 480 மில்லி கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தெஹிவளை […]
யாழில் மிரட்டிய பொலிசார்-ஒரு மணிநேரத்தில் கொள்ளையனை தட்டி தூக்கிய வேகம்..!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) […]
பொது இடங்களில் கூவி கூவி கசிப்பு விற்பனை-தட்டி தூக்கிய பொலிசார்..!
மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் […]