Tag: நடவடிக்கை.
தென்னை மரத்தை தாக்கி வரும் ‘வெண் ஈ நோய்’ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. குறித்த நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பயிர் பாதுகாப்பு சேவை நிலைய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (15) மன்னாருக்கு வருகை தந்து மன்னாரிலும் குறித்த நோய் தாக்கம் தொடர்பாக தெளிவு படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் வளாகத்திலும் நோய் தாக்கத்திற்கு […]
மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை -வரி செலுத்தாத வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் அகற்றல்.
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது மன்னார் நகர சபையிடம் உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சி படுத்தப்பட்டிருந்த மொபிடெல் நிறுவனம் உள்ளடங்களாக பல்வேறு நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகள் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப் படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, கடிதங்கள் அனுப்பப்பட்டு உரிய அனுமதி யை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகள் மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது. மேலும் நகர சபை எல்லைக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபார வர்த்தக நிலையங்கள்,சிற்றுண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை […]
கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறார்-வடக்கு ஆளுநர் மகஜர் வாங்குகிறார்..!
வட மாகாணத்தில் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடமாகாண ஆளுநருக்கு பல மகஜர்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றையதினம் செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்திய சட்ட விரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்தவும் உள்ளூர் சட்ட விரோத தொழிலை கட்டுத்துமாறு கோரி மஜகர் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு […]
யாழ் நல்லூர் விபத்தில் உயிரிழந்த முல்லை இளைஞன்-ஆளுனர் அதிரடி நடவடிக்கை..!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை […]
தமிழர் பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் – தேடுதல் நடவடிக்கை இருளால் இடைநிறுத்தம்..!
மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை […]
தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க நடவடிக்கை.!
சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா […]
மீனவர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைதீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைகளை கௌரவ ஆளுநரிடம் முன்வைத்தனர். ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் […]
மீனவர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!
மீனவர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின்...
சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி!
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கை.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை, நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் நடைபெற்றது.இதனை மேற்பார்வை செய்த முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...