Tag: நாடு
கொழும்பு துறைமுகத்து கப்பல் கொள்கலனுக்குள் மறைந்து மலேசியா சென்ற தமிழ் ஆணும் பெண்ணும் நாடுகள் பல சுற்றி நாடு...
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது. இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா […]
எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும்..!{படங்கள்}
எமது பிள்ளைகளை காணாமல் ஆக்க செய்தவர்கள் அழிந்து நாடு கடத்தப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு வேண்டுதலில் ஈடுபட்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நீதி கோரிய போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் […]
நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுவையே நாட்டிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 25 இலங்கையர்கள், 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாள பிரஜைகள் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான திகதி இதுவரை […]
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்
ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]
ஜோர்தானில் சிக்கியிருந்த 66 பேர் நாடு திரும்பினர்
ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.