Tag: நாட்டு
முட்டையின் விலை ஏற்றம்.!
இவ் வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொசவிற்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் அண்மித்து வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது சதொச சிறப்பங்காடிகளிலும், சில்லறை வர்த்தக நிலையங்களிலும் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேநேரம், திங்கட்கிழமை (12) முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை ரூ. 65க அதிகரிக்கலாம் என […]
‘அசேல’வுக்கு நஞ்சூட்ட முயன்றவர் கைது!
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விகாரையின் பராமரிப்பில் இருந்த அசேல என்ற யானைக்கு விஷம் வைத்து கொல்வதற்கு முயன்றார் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தர்பூசணி (Watermelon) காய்க்குள் விஷத்தை கலந்தே இந்த நபர் அசேல என்ற யானைக்கு கொடுப்பதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வேறு சில சம்பவங்களுக்காக கண்டி […]
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்
ராமர் கோவிலில் நாமல் தரிசனம்.!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
எப்படியிருந்தோம்; இப்படியாகி விட்டோமா? (ஆசிரியர் பார்வையில்..)
எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான். ஆனால் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எந்தக் காலத்திலும் அலைந்தவர்கள் அல்லர். இப்போது ’முற்றவெளியில் முதன்முறையாக ‘ என்ற அறிவிப்புடன், ஏதோ கலையுணர்வே அற்ற ஜென்மங்களுக்காக , மனமிரங்கி வந்திருப்பதாகவே ஹரிகரன் இசைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு ஈழத்தவர். புலம்பெயர் பணக்காரர்களில் […]
தென்னிந்திய பிரபலங்கள் இலங்கை வருகை.!
தென்னிந்திய நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா,நடன இயக்குனர் கலா மாஸ்டர்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை […]
மாலைதீவு படைப் பிரதானி இலங்கை வருகை.!
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் சந்தித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இராணுவத் தளபதியையும் அவர் சந்தித்துள்ளார் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லை : சுதந்திர தினத்தில் தம்பதிகளின் விபரீத முடிவு
மனைவியின் நோய்க்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாலும் அதற்கு போதிய பண வசதி இல்லாததாலும் மனைவிக்கு விஷம் கொடுத்து, கணவனும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெனிவெல்ஹார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஹார பிரதேசத்தில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 54 வயதான மனைவி முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக நீண்ட காலமாக நோய் நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது […]
யாழில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால் பொது போக்குவரத்துக்கு இடையூறு
யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.இந்த பேரணியில், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது நடந்து, மோட்டார் சைக்கிள் மூலம், முச்சக்கர வண்டி...
இன்று 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்!
76 ஆவது சுதந்திர தின விழாவை இன்று காலி முகத்திடலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம்...