Tag: நிகழ்வுக்கு
நிகழ்வுக்கு சேலை அணியாமல் சென்ற ஆசிரியை-துரத்தி விட்ட அதிகாரி..!
கிராகம பிரதேசத்திலுள்ள உள்ள ஆசிரிய கலாசாலைக்கு இன்று (18) ஞாயிறுக்கிழமை சேலை அணிந்து செல்லாத காரணத்தினால் ஆசிரியை ஒருவரை அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை கடுகண்ணாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (18) கிராகம ஆசிரிய கலாசாலையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுக்கு குறித்த ஆசிரியை சேலை அணியாது சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரல் வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.