Tag: நிகழ்வு..!
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் கௌரவிப்பு நிகழ்வு.
முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும், நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தினரின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் அதனுடன் இணைந்த படப்பிடிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் சி.குகநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புஸ்பராணி புவனேஸ்வரன் கூடட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் முல்லைத்தீவு, கௌரவ விருந்தினராக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க […]
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியத்தால் முன்னெடுக்கப்பட்ட மகளிர்தின நிகழ்வு.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக “பெண்களுக்கான ஆதரவின் மூலம் பொருளாதார மாற்றம்”: “நெருக்கடிக்கு ஒரு பதிலளிப்பு.’ (“Economic Transformation through Support for Women”: ‘A Response to the Crisis.) இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமகால பொருளாதார நெருக்கடிக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் கருத்துபரிமாறல்கள் இடம்பெற்றன. குறிப்பாக பெண் தொழிற்படையினர் (Labour Force), புலம்பெயர் தொழிலாளர்களாகவுள்ள பெண்கள் (Migrant Workers), ஆடை தொழிற்சாலைகளில் கடமையாற்றும் பெண்கள் (Garnment Sectors) மற்றும் முறைசாரா Informal Sector) முன்னிலைப்படுத்தி துறைசார் கருத்துக்கள் இடம்பெற்றன.
பாலைதீவு அந்தோணியாரின் திருப்பலி நிகழ்வு
வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தில் 02.03.2024 அன்று கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண...
திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராய்வு..!{படங்கள்}
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (29) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் ராமகிருஷ்ணன்,திணைக்கள தலைவர்கள்,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்,இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற […]
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டிய முக்கிய நிகழ்வு!
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) அன்று யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள் என்பவற்றினைப் பற்றிப் பேசும் இலக்கியங்கள் மற்றும் ஏனைய கலை வடிவங்கள் மீது கவனத்தினைக் குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்விலே இலக்கியம், திரைப்படம், நடனம் போன்ற […]
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வயலின் இசை கச்சேரி இடம் பெற்றது. இதில் வயலீனை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் நந்தகுமார், தம்புரா விசயன் ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக கலந்து கொண்டு இன்னிசை விருந்தை நடாத்தியிருந்தனர்.மேலும் ஆண்மீக உரையும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலா […]
மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு
சிறிலங்காவின் சுதந்திரதினமான நேற்று, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில், மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த
நிகழ்வில்...
கட்டைக்காட்டில் சுதந்திர தின நிகழ்வு.!
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது.முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான்...
வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.!
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசியக் கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு...
மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில்...