Tag: நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]
வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் நியமனம்!
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.இளங்கோவன் அவர்கள் இன்றையதினம் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றையதினம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த அதிகாரியான திரு.இளங்கோவன் அவர்கள் கடந்த காலங்களில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளர் பதவியை வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் இதற்கு முன்னர் வடக்கு மாகாண அபிவிருத்திகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் 22.02.2024 ல் திகதி இடப்பட்ட Ese/App/SLps/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்பட்ட கல்வி […]
யாழ் மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் ரத்து..!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை...
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்..!
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய […]
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்..!
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு...
1300 வைத்தியர்கள் மார்ச்சில் நியமனம்
நாட்டின் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியர்கள் பயிற்சியை முடித்ததும் நியமனம் வழங்கப்படும் என, சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரம் பயிற்சிகளை நிறைவு செய்த 90 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார்.