Tag: நிறுவனம்-விமான
வேலை வாய்ப்பு என கூறி போருக்கு அனுப்பிய நிறுவனம்-விமான நிலையத்தில் தெறித்து ஓடிய இலங்கையர்கள்..!
கொழும்பு நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வெளிநாடு செல்லும் நோக்கில் நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் இவ்வாறு தப்பியோடியுள்ளனர். ரஷ்ய இராணுவத்திற்கும்இ சிவில் வேலைகளுக்காகவும் ரஷ்யாவிற்கு அனுப்பப்படவிருந்த 17 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இவ்வாறு தப்பியோடியவர்கள் கம்பஹா கண்டி கம்பளை ருவன்வெல்லஇ காலி மாத்தறை அக்குரஸ்ஸ ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. […]