Tag: நேரலைக்கான
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, நாளை 14ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. பட்மளிப்பு விழா நிகழ்வுகளை பல்கலைக்கழகத்தின் யூரியூப் சனல் மற்றும் முகப்புத்தகம் ஆகிவற்றினூடாக நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இணைக்கப்பட்டுள்ள கீயூ. ஆர் கோர்டை ஸ்கான் செய்வதனூடாக நேரலையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் துணைவேந்தர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.