Tag: பணி
தங்கத்தை தேடும் பணி தோல்வி..!{படங்கள்}
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி தோல்வியில் முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த […]
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி தோல்வி..!
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில்...
கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி..!
வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று திங்கட்கிழமை (26) ஐந்தாவது நாளாக தேடி வருகின்றனர்.
தொடர்ந்து...
தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}
வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் இரண்டு மாதங்களாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர் மக்களின் […]
பணி இடமாற்றத்தால் ஏற்பட்ட மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!
பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது இல்லத்தில் […]
ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம்
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் உடலில் விஷம் பரவிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் வழங்கிய பால் பக்கெட்டை பருகிய பின்னர் […]