Tag: பதவி
இனி கட்சி பதவி போட்டிகளில் பங்கு கொள்ள மாட்டேன் சீவிகே அதிரடி முடிவு..!
இனிமேல் கட்சி எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ள மாட்டேன் அதனைத் தவிர்த்து கொள்வேன். பலராலும் பரிகசிக்கப்படுகிற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பற்கப்பால் போட்டிகள் தவிர்க்கபட வேண்டும். கட்சிக்குள் பிளவுபட விடாமல் செயற்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது கட்சி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது […]
கெஹெலிய பதவி விலகினார்!
சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். தரமற்ற மருந்துகொள்வனவு மோசடியில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு, தற்போது சிறைச்சாலைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஹெகலியவின் அமைச்சுப் பதவி பறிபோகின்றது!
கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் வசமுள்ள சுற்றாடல்துறை அமைச்சைப் பறித்தெடுத்து இன்னொருவருக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த மோசடியில்...