Tag: பயங்கரவாத
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருக்கு பயங்கரவாத விசாரணை!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர். குறித்த கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான […]
மன்னாரில் ஊடகவியலாளர்கள், இளையோருக்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்..!{படங்கள்}
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் இச்சட்டத்தில் உள்ள நன்மை தீமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. சட்டம் தொடர்பான தெளிவு படுத்தல் களை சட்டத்தரணி புலனி காஞ்சனா ரணசிங்க வழங்கினார். இதன் போது சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் ஸனா இப்ராஹிம் மற்றும் சுதந்திர ஊடக […]
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: உயர்நீதிமன்றில் 30 மனுக்கள் தாக்கல்.!
‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இதனை சபைக்கு அறிவித்த சபாநாயகர் மேலும் கூறுகையில், 2024 சனவரி 23 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 சனவரி 24 ஆம் […]