Tag: பலி-கதறி
அன்மையில் திருமணமான இளைஞன் பலி-கதறி துடிக்கும் மனைவி..!
கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் திருமணமான இவரும் இவரது மனைவியும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் விநியோகம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கோர விபத்து-கணவர் ஸ்தலத்திலே பலி-கதறி துடித்த மனைவி-மலையகத்தில் சம்பவம்..!
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக (கிளினிக்) தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த கீர்த்தி பண்டார என்ற 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த ஜீப் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி மீண்டும் வீதியை நோக்கி வந்ததில் […]