Tag: பலி
திருகோணமலை விபத்தில் செங்கலடி இளைஞர் பலி
இன்று (21) திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை (21) மாலை இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் […]
மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் விபத்தில் பலி!
மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு அவர்கள் இன்று வீதி விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளார். மேற்படி சம்பவம் மட்டக்களப்பு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே அவர் பலியாகியுள்ளார் . செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு (54) வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சம்பவம் […]
அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி
கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிகள் மற்றும் […]
வவுனியா இளைஞர்கள் இருவர் பலி
யாழ்ப்பாணம் – இளவாலை கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் ஒருவரின் சடலம் முதலில் கரையொதுங்கியது. தொடர்ந்து, நீரில் அடித்துச்செல்லப்பட்ட மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது சடலமும் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூவரில் இருவர் உயிரிழப்பு வவுனியாவில் கங்கன்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த […]
கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!
புத்தளம் – கற்பிட்டி – நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குறித்த சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் […]
கனடாவில் பயங்கரம்-ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோர விபத்து-சம்பவ இடத்திலே இரு தமிழர் பலி..!
அரவக்குறிச்சி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் படுகாயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன் ( 42 ). ஏழூரை சேர்ந்தவர் சரவணன் ( 45 ). இவர்கள் இருவரும் திருச்செந்தூர் செல்வதற்காக காரில் நேற்றிவு புறப்பட்டுள்ளனர். காரை சரவணன் ஓட்டியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கணவாய் ஜக்கம்மாள் கோயில் […]
மற்றுமொரு கோர விபத்து-4 வயது குழந்தை பலி..!
நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் […]
இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து-மூவர் பலி..!
பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் […]