Tag: பலி
சற்று முன் நேர்ந்த கோர விபத்து-இளைஞன் பலி..!
கலன்பிந்துனுவெவ – கதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராஜாங்கனை தெற்கு பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என […]
சற்று முன் நல்லூருக்கு முன்பாக பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் பலி..!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராவணா எல்லப்பகுதியில் தவறிவிழுந்து குடும்பஸ்தர் பலி..!
எல்ல பிரதேசத்தில் சென்ற நபர் ஒருவர் நேற்றிரவு (22) எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 32 வயதுடைய நபர் பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்த நபர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மாடியிலிருந்து விழுந்து பெண் பலி..!
பம்பலப்பிட்டி , மிலாகிரிய அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தொடர்மாடியில் வசிக்கும் 74 வயதுடைய மூதாட்டியாவார். இவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் இன்று நடந்த கோர விபத்து-ஒருவர் பலி..!
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். மானிப்பாய் – பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். சம்பவம் […]
கொழும்பில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்-இன்றும் ஒருவர் பலி..!
இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூடு – வெல்லே சாரங்கவின் உறவினர் டொன் சுஜித் பலி. மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட […]
கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரான 27 வயதான யுவதி பத்தரமுல்ல, விக்கிரமசிங்கபுரவில் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியில் அவர் மோதியுள்ளார். பத்தரமுல்லை, விக்கிரமசிங்கபுர, 10வது லேனில் வசித்து வந்த லக்மினி போகமுவ என்ற 27 வயதுடைய விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விக்கிரமசிங்கபுரவிலிருந்து வேலைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் சென்ற போது பத்தரமுல்ல பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச் சென்ற லொறியின் […]
சற்று முன் இலங்கையை அதிர வைத்த விபத்து-2 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் சற்றுமுன் நேர்ந்த விபத்து-பெண் பலி..!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பேருந்தில் இறங்க முற்பட்ட வேளை பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியமையால் , தவறி விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் கஞ்சா வாங்க அம்மா பணம் கொடுக்கவில்லை-போதைப் பொருள் பாவனையால் இருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருள் பாவனையால் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயது இளைஞன் உயிரை மாய்த்துள்ளார். நீண்டநாளுக்கு பின்னர் போதைப்பொருள் பாவித்த 26 வயதான இளைஞன் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயதானவர் உயிரை மாய்த்த சம்பவம் மல்லாகத்தில் நடந்தது. அந்த இளைஞன் போதைப்பொருள், போதை மாத்திரைகளுக்கு அடிமையானவர். போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிறைச்சாலையிலிருந்தவர் அண்மையில்தான் விடுதலையாகியிருந்தார். […]