Tag: பலி
மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி பலி…!
சட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். ஊவா பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மின்சாரக் கம்பி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் கோரவிபத்து-குடும்பஸ்தர் பலி..!
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த […]
சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-ஒருவர் பலி..!
தம்புள்ளை – பல்வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியை கடக்க முற்பட்டபோது இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலிரவில் அதிகளவு ஊக்க மாத்திரை பயன்படுத்திய மணமகன்-மணமகள் பலி..!
உத்தரப்பிரதேசம் ஹமிர்பூரைச் சேர்ந்தவர் அந்த மணமகன். இவருக்குத்தான் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் யாரும் கிடையாது. அவரது ஒரே சகோதரர் மட்டும்தான். அரசு ஊழியரான அவர், தன் சகோதரி விருப்பப்படியே அந்தத் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியுள்ளார். அவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி 3ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரவுக்காக தம்பதிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் மணமகன் ஆண்மையை அதிகரிக்கும் வகையில், அதற்கான மாத்திரைகளை மருத்துவரின் […]
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி..!
மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார். விபத்தில் குழந்தை, பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் இந்நிலையிலேயே விபத்தில் […]
மரம் விழுந்து குடும்பஸ்தர் பலி..!
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் மற்றுமொரு சோகம்-ஒருவர் பலி..!
நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் பிரேதப் […]
மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த இளைஞன் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து […]
மலையகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி..!
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலையில் பெரும் சோகம்-இருவர் பலி..!
திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.