Tag: பேருக்கு
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு சென்றனர். இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலை தீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் விபத்து-ஏழு பேருக்கு நேர்ந்த கதி..!
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை...
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி-7000 பேருக்கு நேர்ந்த கதி..!
அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது. இவற்றில் குறைந்த வருமானம் பெறுவோர், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த ஏழாயிரம் பேர் தற்போதைக்கு அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு-4000 பேருக்கு அழைப்பு..!
நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கிராம உத்தியோகஸ்த்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகளானது பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 4000 பேரை அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள், சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் […]
அரச வேலை வாய்ப்பு 2000 பேருக்கு – 4000 பேருக்கு அழைப்பு..!
நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை அரச வேலை வாய்ப்பு சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...
இலங்கையை உலுக்கிய கோர விபத்து-10 பேருக்கு நேர்ந்த கதி..!
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன. குறித்த விபத்தில் […]
சற்று முன் நேர்ந்த கோர விபத்து-12 பேருக்கு நேர்ந்த கதி..!
வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கலுகமுவ வீதியில் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு “அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல்” நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட […]