Tag: பொது
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்றையதினம் மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரத்தை எமக்கும் தாருங்கள் என கேட்க்கவில்லை. மாறாக சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை […]
பொது இடங்களில் கூவி கூவி கசிப்பு விற்பனை-தட்டி தூக்கிய பொலிசார்..!
மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் […]
யாழில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால் பொது போக்குவரத்துக்கு இடையூறு
யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.இந்த பேரணியில், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது நடந்து, மோட்டார் சைக்கிள் மூலம், முச்சக்கர வண்டி...