Tag: மகிழ்ச்சி
அஸ்வெசும பயனாளிகளுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் அந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த முழுமையான திட்டத்திற்கும் 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி […]
6ம் தரத்திற்கு மேல் பாடங்கள் குறைப்பு-மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்ப பூர்வீக கைத்தொழிகளை இணைத்து எஞ்சிய 03 பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், பாடசாலைகளுக்கு வரும் […]
உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தோற்றிய மாணவர்களுக்கும் அதே வகையான பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான பெரு மகிழ்ச்சி தகவல்..!
ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் […]
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!
ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் கட்டண குறைப்பு தொடர்பில் சற்று முன் அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்..!
கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும். […]
ஆசிரியர் ஆட்சேர்ப்பு-வெளியான மகிழ்ச்சி தகவல்..!
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்: 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்கள் யாவும் […]
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்-குறைந்த வங்கி கடன் வட்டி வீதங்கள்..!
நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் கடந்த வாரத்தில் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25.35% ஆக இருந்த, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதம் (AWPR) தற்போது 11.61 ஆக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் வங்கி கடந்த வாரத்தில் ஏனைய வணிக வங்கிகளை விட முதன்மை […]
இலங்கையில் 10000 வீடுகள்-வெளியான மகிழ்ச்சி தகவல்..!
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பிரதான நிகழ்வு இன்று (19) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை […]