Tag: மட்டக்களப்பு
மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்;வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாததையடுத்து வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த வைத்தியசாலையின் கதிர்வீச்சு சிகிச்சைக்காக திருகோணமலை. அம்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து நோய்க்கான சிகிச்சையை பெறுவதற்காக அதிகமான நோயாளர்கள் வருவது வழமை இந்த நிலையில் குறித்த கதிர்வீச்சு இயந்திரம் […]
மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றார். இன்று காலை பாடசாலை அதிபர் கே.குகதாசன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார். இதன் போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் […]
மட்டு கொக்கட்டிச்சோலையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கு ராணுவத்தினரின் நற்பணி!
கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும,; வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (13) கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன ஆலோசனையின் கீழ் இராணுவத்தினரால் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக சில்வர் மில் அறக்கட்டளை நிதி அனுசரணையில் குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமென்ற் இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்மசிறி ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன, அதிதிகளாக அம்பாறை 24 வது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிபுள் சந்திரநிறி மட்டக்களப்பு கல்லடி 243 வது […]
தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் 23 வயது அழகி கைது..!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், […]
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத யூஸ் விற்பனை..!{படங்கள்}
மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாதது பொது சுகாதாரபரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அடைத்த பிளாஸ்ரிக் போத்தலில் விற்பனை செய்யப்பட்டுவந்த யூஸ் போத்தல் கம்பனி முகாமையாளர்;, முகவர் மற்றும் விற்பனை செய்த வர்த்தகர் ஆகிய 3 பேரையும் 80 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் அந்த யூஸ் போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு […]
விற்பனைக்கு வலம்புரி சங்குடன் மட்டக்களப்பு சென்ற பிக்குவுக்கு நேர்ந்த கதி..!
மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (7) இரவு மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் […]
மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு-ஒருவருக்கு நேர்ந்த கதி..!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இன்று (07) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவ தினமான இன்று பகல் காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் […]
வாழைச்சேனை அழகியிடம் இருந்த யாரிடமும் இல்லா புதியவகை ஆபத்தான பொருள்..!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் நீல நிறம் கொண்ட புதிய ஐஸ் போதைப்பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அம்பாறை […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-20 வயது இளைஞன் பலி..!{படங்கள்}
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு […]
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து பெண் பலி..!
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஓட்டமாவடி...