Tag: மன்னாரில்
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களின் கோரிக்கை-அபிப்பிராயங்கள்..!{படங்கள்}
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகள் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(6) மதியம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த மாதம் முன் வைக்கப்பட்ட 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இறுதி சுற்றறிக்கை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் […]
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேருந்தின் அவலநிலை..!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மன்னார் மாவட்ட போக்குவரத்து சாலை பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதுடன் தூர பிரயாணங்களின் போது பேருந்துகள் நடுவீதியில் அடிக்கடி பழுதடை வதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு தகுதியற்ற பேருந்துகள் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக […]
மன்னாரில் தியாகி சாந்தனுக்கு அஞ்சலி..!{படங்கள்}
மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வு மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (04) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் ன் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள், முன்னால் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய […]
மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்..!{படங்கள்}
எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(3) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது நிர்வாக தெரிவு இடம்பெற்றது. தலைவராக ஜேசு டெலாஸ் சன் குட்டி,செயலாளராக றெஜிஸ் ராஜநாயகம்,பொருளாளராக தட்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் போது எதிர் காலத்தில் சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகள் நடத்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. -மேலும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இரு அணிகளை மாவட்டத்தில் உறுவாக்குதல்,வெளி மாவட்டங்களுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ளுதல் […]
மன்னாரில் மிரட்டிய கடற்படை மற்றும் அதிரடிப்படை..!{படங்கள்}
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,ஆயிரம் Pregabalin காப்ஸ்யூல்கள் மருந்து வில்லைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் […]
மன்னாரில் ஊடகவியலாளர்கள், இளையோருக்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்..!{படங்கள்}
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் இச்சட்டத்தில் உள்ள நன்மை தீமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. சட்டம் தொடர்பான தெளிவு படுத்தல் களை சட்டத்தரணி புலனி காஞ்சனா ரணசிங்க வழங்கினார். இதன் போது சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் ஸனா இப்ராஹிம் மற்றும் சுதந்திர ஊடக […]
மன்னாரில் மாற்று திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பு..!{படங்கள்}
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் நிரந்தரமான வருமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் தெரிவித்தார். மன்னார் நலன்புரிச்சங்கம் ஐக்கிய ராச்சியத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று (20) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட […]
மன்னாரில் துப்பாக்கி சூடு-வீதியை மறித்த மக்கள்-பரபரப்பு தகவல்..!{படங்கள்}
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இன்று திங்கட்கிழமை (19) காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் […]
மன்னாரில் அரசியலில் ஈடுபடும் மற்றும் அரசியல் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு..!{படங்கள்}
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (17)மன்னாரில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி அரசியலில் ஈடுபடும் மற்றும் அரசியலில் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சிறப்பு வளவாளராக ஓய்வு பெற்ற முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டாலின் டிமேல் கலந்து கொண்டு அவர்களால் முன் எடுக்கப்பட்டது. இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களை […]
மன்னாரில் 10 வயது சிறுமி கொடூர கொலை-வீதிக்கு இறங்கிய மக்கள்..!
தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற நிலையில் குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் நேற்று மாலை சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டிருந்தது இச் சம்பவத்தையடுத்து, சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் இந்த நிலையில் இன்றைய தினம்(16) தலைமன்னார் பொலிஸார் மற்றும் soco பொலிஸார் , மன்னார் நீதவான் […]