Tag: மருத்துவர்கள்
6 மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தை -போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!
ஆறே மாதங்களில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இரண்டரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்தியாவின் பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்த வங்கி ஊழியர் சித்தப்பா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பத்து மாதங்களில், தாயின் கருவில் இருந்து வெளியே வர வேண்டிய குழந்தைகள், ஆறு மாதங்களிலேயே சுகப்பிரசவத்தில் வெளியே வந்தனர். அப்போது குழந்தைகளின் எடை 830, 890 கிராம் […]
இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர். திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர். பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது […]