Tag: மற்றுமொரு
மற்றுமொரு பயங்கர விபத்து-ஒருவர் பலி-சிலர் காயம்..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கஹதுடுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 1 கட்டைக்கு அருகில் இன்று (26) அதிகாலை மற்றுமொரு பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறிய லொறி ஒன்று முன்னால் சென்ற லொறியுடன்...
மாணவர்களுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த முழுமையான திட்டத்திற்கும் 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி […]
மற்றுமொரு பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி..!
தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று (23) பிற்பகல் இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது பாட்டி மற்றும் சகோதரருடன் அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காலி – ஹல்வித்திகல பகுதியில் வசிக்கும் […]
மியன்மார் பயங்கரவாதிகளால் மற்றுமொரு இலங்கையர் சிறைப்பிடிப்பு..!
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌிப்படுத்தியிருந்தோம். இந்த குழு மியான்மரில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் மற்றுமொரு இலங்கையர் சைபர் அடிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வௌியிட்டுள்ளார். அவர் […]
மற்றுமொரு கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..!
கஹதுடுவ – ரிலாவல பிரதேசத்தில் இன்று (23) பிற்பகல் மோட்டார் சைக்கிளும் காரொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் தற்போது வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஹொரணை-கொழும்பு வீதியில் மத்தேகொட நோக்கி திரும்பும் போது கொழும்பில் இருந்து வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மற்றும் கார் சாரதியின் கவனக்குறைவால் இந்த […]
யாழில் மற்றுமொரு விபத்து-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி-செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார் வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக […]
யாழில் மற்றுமொரு இளைஞன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!
நேற்றையதினம் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சட லத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.
வேகமாய் பரவும் மற்றுமொரு நோய்-அதிர்ச்சி தகவல்..!
கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான தொற்று பரவுவது குறித்து கவலை எழுப்பியுள்ளனர். மேலும், அது விரைவில் மனிதர்களை பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாள்பட்ட இளைப்பை நோயான இது பெரும்பாலும் “ஜாம்பி மான் நோய்” என்று அழைக்கப்படுகிறது. தி கார்டியன் செய்திச் சேவையின் தகவலின்படி, கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா தற்சமயம் நோயின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு உத்தியை வெளியிட்டுள்ளது. நோய் அறிகுறி நாள்பட்ட இளைப்பை நோய் […]
மலையகத்தில் மற்றுமொரு சோகம்-இரு குழந்தைகளின் தந்தை சடலமாக மீட்பு..!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா கனகேஸ்வரன் இரண்டு குழந்தைகளின் தந்தை கடந்த 15 ம் திகதி தனது வீட்டில் இருந்து கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போய் உள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவரது மனைவி 16 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். நீரில் […]
யாழில் மற்றுமொரு சோகம்-புடவைக்கடை உரிமையாளர் உயிரிழப்பு..!
அன்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு தாமாந்தோட்டம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ் -மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் யாழ்ப்பாணம் நீயுராகம்ஸ் புடவைக்கடை உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்தபோது எதிரே வந்த அன்புலன்ஸ் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் […]