Tag: மலை
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
வெடுக்கு நாறி மலை பூசகர் கைது-அதிகாரத்தால் அடக்குமுறையை கையாளும் பொலிசார்..?
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசா கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரையும் நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழை மரங்கள், தண்ணீர் பெளசர் போன்றவற்றை பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே பூசகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்..
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் மகாசிவராத்திரி பெரு விழா-நீதிமன்று சொல்வதென்ன..!
வவுனியா – வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர். எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி […]
சிவனொலி பாத மலை சென்று திரும்புகையில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ஊசி மலை பிரதேசத்தில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேளையில் நபர் ஒருவர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இவ்வாறு மரணித்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.சிறிபால என்ற 73 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு […]