Tag: மலையக
மது போதையில் நடமாடிய பௌத்த பிக்கு கைது
காலி பகுதியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் நல்லதண்ணி நகரில் மது போதையில் நடமாடிய நிலையில் நேற்று மாலை நல்லதண்ணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்கு காலி பகுதியில் உள்ள பிரபல பௌத்த விகாரையைச் சேர்ந்தவர் எனவும் நேற்று மாலை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் இவர் அதிகளவில் போதையில் நடமாடியதை தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்று காலை […]
நுவரெலியாவில் வீடு உடைத்து உள்நுளைந்தவரிற்கு நேர்ந்த கதி
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு தனி வீடு ஒன்றினை உடைத்து உள்நுழைந்த குற்றவாளி தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை இன்று புதன்கிழமை (20) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த குற்றவாளி வீட்டின் பின்புற நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து வீட்டில் எந்தவிதமான பொருள்களையும் எடுத்துச் செல்லாமல் மீண்டும் […]
ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் அதன் மகளீர் அணி பிரிவான மலையக மகளீர் முன்னணி ஏற்பாட்டில் இராகலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது.இதில் மலையகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான வே.ராதாகிருஸ்ணனின் உருவம் பதித்த தபால் முத்திரை இராதாகிருஸ்ணன் கரங்களினூடாக வெளியிடப்பட்டது.
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்து மக்களுக்கு – ஜீவன் தொண்டமானின் உதவி.
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது. ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக […]
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்ப வானிலை.
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான வானிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மவுஸ்சாக்கலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 23 அடி குறைந்து உள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 22 அடி குறைந்து உள்ளது. இந்த காலநிலை தொடர்ந்தால் இப் பகுதியில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்த கங்குல ஓயா, மற்றும் ஏனைய சிற்றாறுகள் கெசல்கமு ஓயா மகாவலி கங்கை அப் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளில் தற்போது மிக மிக குறைந்த நீர் வரத்து […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் இத்தீர்ப்பு இன்று (13.03.2014) பகல் வழங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த பாருக் மொஹமட் சாலித் என்ற நபர் , அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து , குறித்த நபர்மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீPதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுவந்த நிலையில், வழக்கிற்கான தீர்ப்பு இன்று (13.03.2024) வழங்கப்பட்டது. இதன்போது […]
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்றையதினம் மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரத்தை எமக்கும் தாருங்கள் என கேட்க்கவில்லை. மாறாக சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை […]
மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் […]
மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}
மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் நோட்டன் அட்லிஸ் பகுதியில் இன்று மதியம் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இன்று மதியம் இப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய வாகை மரம் சரிந்ததால் சுமார் நான்கு மணித்தியாலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் […]
கழண்டோடி கால்வாய்க்குள் தஞ்சமடைந்த அரச பேரூந்து ரயர்-பதறிய பயணிகள்..!{படங்கள்}
ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸின் டயர், ரம்புக்பிட்டிய பகுதியில் வைத்து கழன்று சென்றுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச்சம்பவத்தால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.