Tag: மாகாணத்தில்
வடக்கு மாகாணத்தில் அனைத்து தனியார் பேரூந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்-பயணிகள் அந்தரம்..!{படங்கள்}
வடக்கு மாகாணத்தில் அனைத்து தனியார் பேரூந்து சேவைகளும் முற்றாக இடைநிறுத்தம்! யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேறையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுத்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் […]
கிழக்கு மாகாணத்தில் கல்வி சமூகம் போராட்டம்..!
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தற்போது தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்ற இவ்வேளையில் சிலர் அரசியல் சுயநலம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பணிமனைகளில்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் சந்திப்பு..!{படங்கள்}
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் வடக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள திருமறை கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , வலிந்து கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் […]
வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர். திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர். பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது […]