Tag: மாணவர்களை
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. 7.30க்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர். மன உலைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண […]
தும்புத்தடியால் மூன்று மாணவர்களை துவைத்தெடுத்த ஆசிரியர்..!
பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர் இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்டைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் இந்த மூன்று மாணவர்களையும் தாக்கியதாக முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்
தும்புத்தடியால் மூன்று மாணவர்களை துவைத்தெடுத்த ஆசிரியர்..!
பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர்...
மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த பானங்கள்..!
அளுத்கம பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அளுத்கம பிரதான பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப்பொள் கலந்த பானங்களை குடிப்பதாக அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அளுத்கம நகரில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை விசேட பொலிஸ் குழுவினர், முகவராகப் பயன்படுத்திச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது நகரின் பிரதான பாடசாலைக்கு அருகாமையில் இயங்கி வந்த கடையில், கஞ்சா கலந்த பானங்கள் விற்பனை செய்வதாகத் தெரிய […]
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா
யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பெருமளவான மாவா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33...