Tag: மாணவர்கள்:
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து! – மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
கடலில் மாயமான கல்லூரி மாணவர்கள் நால்வரின் உடலங்கள் மீட்பு..!
ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர்மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்தகலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர்இரு குழுக்களாக நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த கல்லூரி மாணவர்கள் 40 பேரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்தனர். அப்போதுகடல் சீற்றம் அதிகமாக இருந்ததால்10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்துச் சென்றது. இதைக் கண்ட கரையிலிருந்த சகமாணவர்கள் தங்கள் நண்பர்களைக் காப்பாற்றக் கோரி […]
தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-மதற்றமான மாணவர்கள்..!
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசியை ஒருவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மேற்படி பாடசாலையின் கடமையாற்றி வந்த அதிபர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதனையடுத்து புதிதாக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபருக்கும் ஆசிரியைக்கும் இடையில் தெடர்ச்சியாக முரண்பாடு நிலவியது. இந்த […]
தமிழர் பாடசாலை ஒன்றில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு-பதற்றமான மாணவர்கள்..!
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று(01) இடம் பெற்றுள்ளது.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும்...
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை..!{படங்கள்}
மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட Ninnada23 போட்டி தொடரின் முதலாம் சுற்று கடந்த 2023 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி online மூலம் நடைபெற்றது. இந்த போட்டி தொடரில் மட் / மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யைச் சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர். இதில் இரு மாணவர்களும் […]
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை
ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை
மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு...
யாழில் புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல் ..!
தரம்-6க்கு புதிதாக இணைத் துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் – 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகையால் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளான். நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. தரம்-6 இல் புதுமுக மாணவனாக அந் தப் பாடசாலைக்குச் சென்றுள்ளான். மறுநாளே தரம் 10 […]
சாமிமலை ப உள்ள கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்..!{படங்கள்}
இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவில்லை சிங்கள பாடசாலையில் ஆசியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தேவை என கோரிக்கை முன் வைத்து சாமிமலை கவரவில்லை பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம் பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட காரர்கள் […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கல்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பாக நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை […]