Tag: மாதங்கள்
யாழில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை இன்றையதினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]
நெடுந்தீவை உலுக்கிய கொலைச் சந்தேகநபர்!! ஆறு மாதங்கள் முடிந்தும் விளக்கமறியல் நீடிப்பு!
நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (நவம்பர் 1) சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்னர். கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 06 முதியவர்களை படுகொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கொலைக்கென பயன்படுத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் முடிவுற்ற நிலையில் தொடர்ந்து […]