Tag: மீட்பு
மது போதையில் இரத்த வாந்தி எடுத்தவர் சடலமாக மீட்பு
வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள்ளேயே ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இறந்தவர் வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபரம் செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 43வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவர் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்தவர் என்றும் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் நேற்றைய தினம் மாலை வேளை அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த […]
முல்லைத்தீவில் தனியார் காணியிலிருந்து செல் மீட்பு
கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றினை உரிமையாளரினால் இன்றையதினம் (21.03.2024) துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து கொக்குளாய் பொலிசாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸாரால் […]
இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு!
23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.
ஹோட்டல் அறையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!
பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண் ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர். இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் […]
கடலில் மாயமான கல்லூரி மாணவர்கள் நால்வரின் உடலங்கள் மீட்பு..!
ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர்மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்தகலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர்இரு குழுக்களாக நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த கல்லூரி மாணவர்கள் 40 பேரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்தனர். அப்போதுகடல் சீற்றம் அதிகமாக இருந்ததால்10 மாணவர்களை ராட்சத அலை கடலுக்கு இழுத்துச் சென்றது. இதைக் கண்ட கரையிலிருந்த சகமாணவர்கள் தங்கள் நண்பர்களைக் காப்பாற்றக் கோரி […]
பயங்கரவாதிகள் பிடியிலிருந்து சில இலங்கையர்கள் மீட்பு..!
மியான்மரில் உள்ள மியாவடி பகுதியில் சைபர் கிரைம் வலயத்தில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் குழுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 08 பேர் இன்று காலை மியன்மார் பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த குழுவினர் தற்போது மியாவடி பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார […]
மலையகத்தில் காணாமல் போன பாலசுந்தரம் காலையில் சடலமாக மீட்பு..!
நோர்வூட் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதற்கமைய காணமல் போன நபரை தேடி தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து குறித்த […]
நீர்கொழும்பு சந்தையில் ஆணின் சடலம் மீட்பு..!
நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
நீர்கொழும்பு சந்தையில் ஆணின் சடலம் மீட்பு..!
நீர்கொழும்பு - காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல...
மாந்தை கிழக்கில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி மீட்பு..!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பகுதியில் கடந்த 05.11.2023 அன்று தனது மகனை காணவில்லை என தந்தை ஒருவரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறித்த முறைப்பாட்டில் ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் எனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்த முறைப்பட்டிற்கமைய பொலிசார் தேடிதல் நடவடிக்கையை முடக்கி விட்டிருந்த சந்தர்ப்பத்தில் , காணாமல் போன இளைஞரால் பாவிக்கப்பட்டதென நம்பப்படும் துவிச்சக்கரவண்டி முறைப்பாடு பதிவு செய்யப்படிருந்த பின் ஒரு சில நாட்களில் கண்டெடுக்கப்பட்டதுடன் விசாரணைகளும் […]