Tag: மீனவர்கள்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 31 மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை […]
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!
இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியல்!
எல்லை தாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், […]
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்கள் கைது!
இன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், குறித்த மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது !
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் இன்று 12.03.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திச போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
ஆழியவளை கடற்பரப்பில் இரு மீனவர்கள் கைது..!
சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று (07.03.2024) வியாழன் இருவர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக வெற்றிலைக்கேணி கடற்படை வடமராட்சி கடற்பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இதன் விரிவாக்கமாக கடந்த வியாழக்கிழமை காலை ஆழியவளை கடற்பகுதியில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் […]
பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம்..!{படங்கள்}
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம் புதன்கிழமை (6) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை 9.30 மணியளவில் பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதி க்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை,குறித்த கிராம மீனவர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் […]
பாரத பிரதமருக்கு வடமாகாண மீனவர்கள் கடிதம் அனுப்பி போராட்டம்..!{படங்கள்}
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கு, திகதி: 05. பங்குனி. 2024 ஆண்டு இந்திய துணைத்தூதுவர் ஊடாக (ஊடாக), யாழ்ப்பாணம் இலங்கை தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையும் அவர்களின் இழுவைமடி தொழில் முறையினால் எமது மீனர்வர்களின் வாழ்வாதார இழப்பும். இலங்கையின் வட மாகாணத்தில்சுமார் இரண்டு இலட்சம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழுகின்றனர் மேலும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மீன்பிடி தொழிலை நம்பிய வாழ்வாதார தொழில்களில் தங்கி வாழ்ந்து வருகின்றனர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அனைத்து […]
நாளையும் மீனவர்கள் யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்தாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை (05) காலை 10:30 மணிக்கு […]
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்-பொலிசாருடனும் முரண்பாடு..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே 03.03.2024 முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலை பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை […]