Tag: மீனவர்கள்
19 தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஆளுநரை சந்தித்த மீனவர்கள்.!
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர். இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக […]
இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி மீனவர்கள் போராட்டம்.!
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை […]
இந்திய மீனவர்கள் கைது..!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று(03) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட...