Tag: மீன்பிடி
யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது !
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் இன்று 12.03.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திச போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...
மட்டக்களப்பு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன் இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில் 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள் முறைப்பாடு செய்து வந்தனர். […]
மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...
மட்டு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன் இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில் 22 அரை...
புதிய மீன்பிடி சட்டத்தை எதிர்க்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டத்தில் நிர்வாக செயல்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது அதாவது வருகின்ற 13.03.2024 வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து யாழில் ஒரு புதிய மீன்பிடி சட்டம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் நிர்வாகம் கலந்துரையாடுவதாகவும்,அந்த சட்டத்தை எதிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது 13.03.2024 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் இருக்குமாயின் அந்த திகதிகளில் மாற்றம் செய்யப்படுமெனவும் இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழில் இணையத்தின் நிர்வாக […]