Home Tags முன்

Tag: முன்

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}

0
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது. லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
சமுர்த்தி திட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!-oneindia news

சமுர்த்தி திட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

0
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள முறையில் நலன்புரி நன்மைகள் சபைக்கு இந்த கட்டாயப் பங்களிப்பை வழங்க வேண்டிய பணத்தின் வகையை குறைத்து, […]
பாடசாலைகளில் அரசியல்-சற்று முன் வெளியான தகவல்..!-oneindia news

பாடசாலைகளில் அரசியல்-சற்று முன் வெளியான தகவல்..!

0
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை கருத்திற்கொண்டு, அந்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை […]
சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!-oneindia news

சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

0
எதிர்காலத்தில் ​வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் என்றார். மேலும் கருத்து தெரிவிக்கையில், […]
முடங்கவுள்ள ரயில் சேவைகள்-சற்று முன் வெளியான அறிவிப்பு..!-oneindia news

முடங்கவுள்ள ரயில் சேவைகள்-சற்று முன் வெளியான அறிவிப்பு..!

0
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் தெரிவித்துள்ளார். இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், ரயில்வே் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
சற்று முன் பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!-oneindia news

சற்று முன் பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!

0
மேல் மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார். மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட […]
இலங்கை மக்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!-oneindia news

இலங்கை மக்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 46.1 வீதமான பெண்களும், 30 வீதமான ஆண்களும் அதிக உடல் எடையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய நீரிழிவு நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் தொற்றா நோய்கள் தொடர்பிலான ஆபத்துக்களை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
சற்று முன் குறைந்த மின் கட்டணம்-மகிழ்ச்சியில் மக்கள்..!-oneindia news

சற்று முன் குறைந்த மின் கட்டணம்-மகிழ்ச்சியில் மக்கள்..!

0
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், […]
சற்று முன் நாட்டை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு-ஒருவர் பலி..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நாட்டை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு-ஒருவர் பலி..!{படங்கள்}

0
ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!{படங்கள்}-oneindia news

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!{படங்கள்}

0
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க  இதுவரை நிதி கிடைக்கவில்லை என வழக்கு மீண்டும் ஏப்ரல் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கானது இன்றையதினம் (04)  முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது   முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்  முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி […]

RECENT POST