Tag: முறையில்
யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது !
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் இன்று 12.03.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திச போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
சூட்சுமமான முறையில் மாடுகள் கடத்தி சென்ற நால்வர் கைது..!{படங்கள்}
அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்று (27.02.2014) இரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸார் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த நபர்களை கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு […]
பாதுகாப்பு அற்ற முறையில் வைக்கப்பட்ட நீர்த்தாங்கி-பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீர் தாங்கி 12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் 14 வருடங்களாக இந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் திகதி இந்த ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து மதிய உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த ஹோட்டலின் மேல்மாடியில் […]
பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி
வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால்...
சாண்டில்யன் வைசாலியின் கை அகற்றப்பட்டமை!! தவறான இடத்தில் கனுலா!! தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து!! விசாரணைக்கு அனுப்பிய...
சாண்டில்யன் வைசாலியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பான நடவடிக்கை கோரல்
எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின் இடது கை மருத்துவ நிபுணர் திரு. N.S. சரவணபவானந்தனின் குழந்தைநல விடுதியில் தங்கி சிகிச்சை...
யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால்...
யாழ் போதனாவில் சிகிச்சையில் அசமந்தம்! காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு சரியான முறையில் ஊசி மருந்து செலுத்தாததால் மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது கை
அண்மைக்காலமாக வவுனியா, கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் நிகழ்ந்த வைத்திய தவறுகளை...