Tag: வட
மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு..!{படங்கள்}
பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 09 நபர் கொண்ட வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு இன்று(18.02.2024) இடம்பெற்றது. மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியக்கொடி, கழக கொடி ஏற்றப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. இதில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பொதுமக்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டு மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். மாபெரும் தொடரின் […]
வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர். திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர். பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது […]