Tag: விபத்து-இரு
வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து – இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தி தமிழர் பகுதியில் நேற்றையதினம் (26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்...
யாழில் மற்றுமொரு விபத்து-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி-செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார் வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக […]
மலையகத்திலும் கோர விபத்து-இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி..!
புரவுன்ஷீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவியர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மஸ்கெலியா நகருக்கு அருகில் உள்ள சாமிமலை பாலத்தை அன்டிய பகுதியில் பாரவூர்தியில் மோதுண்டதால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மாணவிகள் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் முச்சக்கர வண்டி சாரதியும் காயம் அடைந்த நிலையில் அனுமதிக்க பட்டு உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார […]
கிளிநொச்சியிலும் கோர விபத்து-இரு உயிர்கள் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்..!
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியில் வெள்ளிக்கிழமை (16) காலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதியின் புளியம்பொக்கணை பகுதியிலிருந்து மிதிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதிய போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன்போது 02 எருமை மாடுகளும் உயிரிழந்துள்ள நிலையிலும் இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளன. இதே வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதிய எருமை […]