Tag: விபத்து..!{படங்கள்}
சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது. லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}
ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.
யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.