Tag: வீதியில்
மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}
மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் நோட்டன் அட்லிஸ் பகுதியில் இன்று மதியம் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இன்று மதியம் இப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய வாகை மரம் சரிந்ததால் சுமார் நான்கு மணித்தியாலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் […]
கொழும்பு-பதுளை வீதியில் மற்றுமொரு கோர விபத்து-சாரதி கவலைக்கிடம்..!{படங்கள்}
கொழும்பு பதுளை பிரதான வீதியில் எல்லபொல பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறி சாரதி பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பலாங்கொடை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து-பெண் பலி..!
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டமாவடி ஸஹ்றா பெண்கள் அரபுக்கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டு விட்டு வெலிகந்த, குடாபொகுனயிலுள்ள தமது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கொழும்பு பிரதான வீதியில் நாவலடியில் வைத்து மோட்டார் சைக்கிலுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவ […]
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து பெண் பலி..!
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஓட்டமாவடி...
வீதியில் பயணிக்கும் பெண்களிடம் விளையாட்டு காட்டும் இருவர் பதுங்கி இருந்த நிலையில் அள்ளிய பொலிசார்..!
வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 4300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வாள், இரண்டு கைப்பைகள், பெறுமதியான 05 கையடக்கத் தொலைபேசிகள், 02 அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். […]
வீதியில் பயணிக்கும் பெண்களிடம் விளையாட்டு காட்டும் இருவர் பதுங்கி இருந்த நிலையில் அள்ளிய பொலிசார்..!
வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது...
மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!
கடுவெல – மாலம்பே பிரதான வீதியில் (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச் சென்ற டிஃபென்டர் வாகனம் ஒன்று எதிரில் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய டிஃபென்டர் வாகனத்தின் சாரதி, மணமக்களை இடைநடுவே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]
மற்று மொரு கோர விபத்து-நடு வீதியில் தவித்த மணமக்கள்-பலர் காயம்..!
கடுவெல - மாலம்பே பிரதான வீதியில் (01) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.கடுவெல நகரசபைக்கு முன்பாக கடுவெலயிலிருந்து மாலம்பே செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மணமக்களை ஏற்றிச்...
ஹட்டன் பிரதான வீதியில் நடந்த அசம்பாவிதம்-தவறி விழுந்த கைக்குழந்தை..!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தாயின் கையிலிருந்து தவறி விழுந்த நிலையில் ஒரு மாத குழந்தையொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கிதுல்கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நீர்கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, கித்துல்கல குருமெடிய பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்த தாயின் கையில் இருந்த குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் தாய் […]
கண்டி-கொழும்பு வீதியில் விபத்து..!
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் தன்னோவிட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக பாரவூர்தியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்னோவிட்ட பகுதியிலிருந்து கொழும்பு திசையாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் குறித்த பாரவூர்தியின் உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்