Tag: வெடுக்குநாறி
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகா சிவராத்திரி-தடைகளை உடைத்து வெடுக்குநாறி ஆதிசிவனை தரிசித்த மக்கள்..!
வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம் இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேடஅதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் […]
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் மகாசிவராத்திரி பெரு விழா-நீதிமன்று சொல்வதென்ன..!
வவுனியா – வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் (4) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர். எனினும், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த முற்பட்டால் அதற்கு நீதிமன்றில் அனுமதி […]