Home Tags Jaffna news

Tag: jaffna news

தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில்..!{படங்கள்}-oneindia news

தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில்..!{படங்கள்}

0
தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது. நிகழ்வில், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஞா.ஸ்ரீநேசன், ஈ.சரவணபவன்,  சீ.யோகேஸ்வரன்,  […]
யாழில் புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல் ..!-oneindia news

யாழில் புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல் ..!

0
தரம்-6க்கு புதிதாக இணைத் துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் – 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகையால் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளான். நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. தரம்-6 இல் புதுமுக மாணவனாக அந் தப் பாடசாலைக்குச் சென்றுள்ளான். மறுநாளே தரம் 10 […]
ஐபில் போட்டியில் சென்னை அணிக்கு யாழ் மண்ணின் வீரனுக்கு வாய்ப்பா-சற்று முன் வெளியான தகவல்..!-oneindia news

ஐபில் போட்டியில் சென்னை அணிக்கு யாழ் மண்ணின் வீரனுக்கு வாய்ப்பா-சற்று முன் வெளியான தகவல்..!

0
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த வீரர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி அவர் சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்வார் என அந்தப் பதிவில் […]
கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}-oneindia news

கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய வின்சன்டி போல் சபையினர் ஒழுங்குபடுத்திய இலவச கண்பரிசோதனை முகாம் இன்று 24.02.2024  கட்டைக்காட்டில் நடைபெற்றது கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மரியாள் மண்டபத்தில்  ஆரம்பமான குறித்த நிகழ்வில்யாழ் R.i.s கண்பரிசோதனை மையத்தின் வைத்தியர் Dr.ரகு இணைந்து கொண்டு  இலவச கண் பரிசோதனையை மேற்கொண்டதுடன் அதிக விலைக்கழிவில் மூக்குக்கண்ணாடிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்  இந்த இலவச கண் பரிசோதனை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,கேவில் பிரதேச மக்கள் கலந்து […]
யாழ் வல்வையில் பட்டபோட்டியில் முதலிடம் வந்த இளைஞன் தாய்லாந்தில் உலகம் வியக்க சாதனை..!{படங்கள்}-oneindia news

யாழ் வல்வையில் பட்டபோட்டியில் முதலிடம் வந்த இளைஞன் தாய்லாந்தில் உலகம் வியக்க சாதனை..!{படங்கள்}

0
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாபெரும் பட்டம் போட்டியில் முதலிடம் பிடித்த விநோதன் தாய்லாந்திலும் சாதனை புரிந்து உலகவாழ் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார். வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் விநோதன் வியக்க வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக் காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார். தாய்லாந்தில் விநோதனின் சாதனை கடந்த ஐந்து நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு […]
அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!-oneindia news

அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!

0
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க  சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம்..!{படங்கள்}-oneindia news

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம்..!{படங்கள்}

0
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று (24) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. கடந்த 14 ம் திகதி ஆரம்பமான லட்சார்ச்சனையானது தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் மாசி மகத் தீர்த்தத்துடன் நிறைவுற்றது. இந்த உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளினை பெற்றுச் சென்றனர்.
யாழில் இளம்பெண் தவறான முடிவு..!-oneindia news

யாழில் இளம்பெண் தவறான முடிவு..!

0
தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது. சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேரேறி வலம் வந்தாள் நயினை பத்திரகாளி..!{படங்கள்}-oneindia news

தேரேறி வலம் வந்தாள் நயினை பத்திரகாளி..!{படங்கள்}

0
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின்  முத்தேர் இரதோற்சவம்  இன்று சிறப்பாக இடம்பெற்றது. இத் தேவஸ்தானத்தின் உற்சவமானது கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவம் இடம்பெற்றதுடன், எதிர்வரும் 24.02.2024 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம்  இனிதே நிறைவடையும். இவ்மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர். பூந்தண்டிகை மஹோற்சவத்தில் பல்வேறு இடங்களில் […]
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா..!{படங்கள்}-oneindia news

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா..!{படங்கள்}

0
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம்- நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்  இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணி தொடக்கம் 12:45 மணி வரை முதலாவது அமர்வும், மதியம் 2:30 மணி தொடக்கம் 4:50 மணிவரை இரண்டாவது அமர்வாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் கடவுள் வாழ்த்து, மங்கல இசை, நடனம், விலுப்பாட்டு உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது. நூற்றாண்டு விழாவில் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி […]

RECENT POST