Home Tags Jaffna news

Tag: jaffna news

யாழில் மற்றுமொரு விபத்து-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி-செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்..!{படங்கள்}-oneindia news

யாழில் மற்றுமொரு விபத்து-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி-செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று  23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதோடு இதனை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார் வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக […]
கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூட்டை JCB,உழவு இயந்திரம் கொண்டு அகற்றிய கடற்படை..!{படங்கள்}-oneindia news

கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூட்டை JCB,உழவு இயந்திரம் கொண்டு அகற்றிய கடற்படை..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை  கரையொதுங்கிய  இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை  JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது  இதனை அவதானித்த கட்டைக்காடு  மீனவர்கள்  தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர். கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB,உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று23.02.2024 வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீர் சுற்றி வளைப்பில் யாழில் இத்தனை பேர் கைதா-சற்று முன் வெளியான தகவல்..!-oneindia news

திடீர் சுற்றி வளைப்பில் யாழில் இத்தனை பேர் கைதா-சற்று முன் வெளியான தகவல்..!

0
திடீர் சுற்றிவளைப்பில் கடந்த ஒரு மாதத்தில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது! கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக் களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர் களுக்கு நீதிமன்றங்களினால் பிடி யாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு […]
யாழில் மற்றுமொரு இளைஞன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!-oneindia news

யாழில் மற்றுமொரு இளைஞன் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு..!

0
நேற்றையதினம் சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சட லத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கதனமான தாக்குதல்..!-oneindia news

யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கதனமான தாக்குதல்..!

0
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் ஒருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவன் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவனை அழைத்துள்ளார். எனினும் மாணவன் அந்த இடத்துக்குச் செல்லாததையடுத்து கோபமடைந்த ஆசிரியர் உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனைப் பெரிய தடியால் தாக்கியுள்ளார். இதனால் சிறுவனின் கைகளில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் […]
கனடா மோகம்-அழிந்து போகும் சமூகம்-இத்தனை கோடி மோசடியா-சற்று முன் வெளியான தகவல்..!-oneindia news

கனடா மோகம்-அழிந்து போகும் சமூகம்-இத்தனை கோடி மோசடியா-சற்று முன் வெளியான தகவல்..!

0
கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களின்போதே இந்தத் தகவல் தெரியவந் துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை – கனடாவுக்கு அனுப்புவ தாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சி யாக இடம்பெற்று வருகின்றன என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் […]
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!-oneindia news

யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!

0
நேற்றையதினம் யாழ்ப்பாணம், உரும்பிராய்ப் பகுதியில் அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சின்னத்துரை ஜெகதீஸ் வரி (வயது-66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளி வரவில்லை. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை யின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டார்.
யாழில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான முழுமையான விபரம்..!-oneindia news

யாழில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான முழுமையான விபரம்..!

0
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஏ.நிஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்..!-oneindia news

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்..!

0
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் உயர்பாதுகாப்பு வலய இராணுவ குடியிருப்பிற்குள் உள்ள ஆலயங்களில் தற்காலிக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்துக்குள் செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ குடியிருப்பிற்கு முன்னால் […]
சற்று முன் நல்லூருக்கு முன்பாக பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் பலி..!-oneindia news

சற்று முன் நல்லூருக்கு முன்பாக பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் பலி..!

0
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RECENT POST