Tag: jaffna news
யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் பல்கலையில் தாய்மொழி தினம்..!{படங்கள்}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இன்று காலை 9.30 மணியளவில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது “தாய்மொழி பற்றிய கருத்தியல்” எனும் தலைப்பில் சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் இ. அண்ணாமலை நிகழ்நிலையில் உரையாற்றினார். இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் […]
யாழில் இன்று நடந்த கோர விபத்து-ஒருவர் பலி..!
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். மானிப்பாய் – பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். சம்பவம் […]
மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்தும் சங்கானை பிரதேச செயலகம்!
சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன. அந்தவகையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றையதினம் கரம் போட்டிகள் பிரதேச செயலகத்தில் நடைபெற்றன. எதிர்காலத்தில் கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன இந்த […]
கனடா மோகம்-வாழ்வை தொலைக்கும் யாழ்ப்பாணிஸ்-தூதரகம் அதிரடி முடிவு..?
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச் சந்தித்து அதுகுறித்துக் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெருந்தொகைப் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பண மோசடிகள் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]
முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்!{படங்கள்}
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இன்று (20.02.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ் குடாநாடாடில் காணப்படும் தீவுகளில் ஒன்றான நயினாதீவில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வரை வசிக்கின்றனர். மூன்று […]
வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம்..!{படங்கள்}
வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆண்டறிக்கையும்,ஆண்டு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு அதனை தொடர்ந்து அபிவிருத்திசங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சந்நிதியான் ஆசிரமத்தால் பெரும் உதவி..!{படங்கள்}
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 20.02.2024 செவ்வாய்க்கிழமை பல இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை கோப்பாயின் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸ்சன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டன. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகலதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்தார்.
யாழில் பிஞ்சில் பழுத்த காதல்-15 வயது சிறுமியை கடத்திச் சென்ற சிறுவன்!
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் […]
யாழில் போதைப்பொருள் நுகர்வதற்கு தயாராக இருந்த 4 பொடியளுக்கு நேர்ந்த கதி..!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். கோண்டாவில் – இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்து இருந்தனர். அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக போதைப்பொருட்களுடன் காணப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் […]