Tag: jaffna news
யாழ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடன் தென்னிலங்கை இளைஞர் தலைமறைவு ..!{படங்கள்}
நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய மோட்டார்சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் பதிவாகியுள்ளது கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார் தலைமறைவான தென்னிலங்கை இளைஞர் 13-02-2024 அன்று சம்பவதினம் கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார் நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 black colour பெறுமதி ரூபா 700,000 , வகை […]
விரிவுரைகளை துரிதப்படுத்த கோரி யாழ் பல்கலையில் வகுப்பு புறக்கணிப்பு..!{படங்கள்}
விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் […]
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடகதொடக்க விழா..!{படங்கள்}
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன் செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது. மங்கள சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் கவிஞர் முல்லை திவ்யன், சிறப்பு விருந்தினரும் ஒளியருவி நிறுவன உரிமையாளர் பிரபாகரன், பாடசாலை அதிபர் […]
யாழ் காணிவிடுவிப்பு தொடர்பில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!{படங்கள்}
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கடந்த வாரம் பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்( […]
அருகே வந்த கூலித்தொழிலாளியை ஏற்றாமல் சென்ற பாதைப் படகு! -பாதையில் செல்லும் பயணிகள் விசனம்.!
ஊர்காவற்றுறை – காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர். […]
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா…!{படங்கள்}
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு. மேலைதேய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து கருத்துரைகளை வடமராட்சி […]
யாழ் காரைநகரில் தயாரிக்கப்பட்ட அதி நவீன சொகுசு கப்பல் வெள்ளோட்டத்திற்கு..! {படங்கள்}
காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் இது ஆகும். இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்க உள்ள சுற்றுலா அதி சொகுசு கப்பல் ஆகும். இதனை தயாரித்து பரீட்சார்த்த பயணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து 19.02.2024 அன்றைய தினம் வெற்றிகரமாக முடிந்தது. சூரிய மின் சக்தி வசதியை கொண்ட சொகுசு கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் கரைநகரில் இவ்வாறான ஓர் தொழிற்சாலை உண்டு […]
யாழில் கடற்படையினரின் வருகை அறிந்து கஞ்சாலை எடுத்து கொண்டு தலைதெறிக்க்
வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை (17.02.2024) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பல பொதிகளில் கடற்கரையில் கஞ்சா மூடைகள் புதைத்து வைத்திருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் திடீரென வெற்றிலைக்கேணி கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. கடற்படையின் வருகையை அறிந்த கடத்தல்காரர்கள் ஏற்கெனவே கஞ்சா பொதிகளை மீட்டுக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் குறித்த கடத்தலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது
யாழ் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரா-கொதித்தெழுந்த மாணவர் சமூகம்..!{படங்கள்}
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7:30 மணிக்கு கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு […]
நண்பனால் பிரிந்த உயிர்-யாழில் சோகம்..!
போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , இளைஞனின் உயிர் பிரிந்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் ,அவற்றில் இருந்து மீண்டு , வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை […]