Tag: jaffna news
யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.
யாழில் 91 சிறுமிகள் அம்மாவாகினர்-வெளியான அதிர்ச்சி தகவல்..!
யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 இளவயது மகப்பேறுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி யாழ் ஆயருடன் சந்திப்பு..!{படங்கள்}
ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மிசறியோ நிறுவன ஆலோசகர் உல்றைக் வைன்ஸ்பாஜ்ச், கரித்தாஸ் கியூடெக் தேசிய இயக்குநர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா, சமாதான நிகழ்ச்சி […]
யாழில் மற்றுமொரு சோகம்-புடவைக்கடை உரிமையாளர் உயிரிழப்பு..!
அன்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு தாமாந்தோட்டம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற அன்புலன்ஸ் -மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் யாழ்ப்பாணம் நீயுராகம்ஸ் புடவைக்கடை உரிமையாளரும் மற்றும் உதவியாளரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்தபோது எதிரே வந்த அன்புலன்ஸ் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தனர் […]
இரும்பு பெட்டியால் யாழ் நகரில் ஏற்ப்பட்ட பதற்றம்..!
யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை கைவிடப்பட்ட நிலையில் இரும்பு பெட்டியொன்று காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர். இதன்போது குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பெட்டியை […]
அம்பன் வைத்தியருக்கு கண்ணீர் மல்க பிரியா விடை..!{படங்கள்}
வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேசவைத்தியசாலையின் வைத்தியர் Dr.கலாநிதி நந்தன் மனோன்மணி அவர்களின் பிரிவுஉபசார விழாவும்,புதிய வைத்தியரை வரவேற்கும் நிகழ்வும்,மற்றும் இடமாற்றமாகி சென்ற ஊழியர் நலன்புரி சங்க ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம்17.02.2024 அம்பன் வைத்தியசாலையில் இடம்பெற்றது. மதியம் 12.00 ஆரம்பமான குறித்த நிகழ்வில் மூன்றுவருட சேவையை நிறைவு செய்து தற்பொழுது பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றலாகி செல்லும் வைத்தியர் Dr.கலாநிதி நந்தன் மனோன்மணி அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார். அம்பன் வைத்தியசாலையில் மூன்று […]
வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு..!{படங்கள்}
யாழ்.வடமராட்சிக் கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவானது இன்றைய தினம் (17) வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் தலைவராக திரு க.சயந்தன் அவர்களும் செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு உ.நிதர்சன் அவர்களும் பொருளாளராக திரு பூ.லின்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு சம்மேளனத்தின் ஏனைய பதவிகளுக்கும் பிரதேச இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த நிகழ்வில் பிரதேசத்தின் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
யாழில் குற்றங்களை தடுக்க சிறப்பு கட்டளைகள்..!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு தீடீர் வருகை மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை வழங்கினார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச்செயல்களை விரைந்து தடுக்குமாறு அறிவுறுத்தல்களை […]
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த உதவிகளும், வாராந்த நிகழ்ச்சிகளும்….!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வுகள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்றது. இறை வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சைவப் புலவர் திருமதி அண்முகவடிவு தில்லைமணி அவர்களால் குமரகுருபரர் சுவாமிகள் பற்றிய ஆன்மீக அருளுரை காலை 10.40 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்றதை தொடர்ந்து வாராந்த உதவிகளாக. யா/ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் […]
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!{படங்கள்}
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மயிலிட்டி திருப்பூர் […]