Home Tags Jaffna news

Tag: jaffna news

பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு - யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!-oneindia news

பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!

0
அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு […]
உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்து!-oneindia news

உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்து!

0
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இன்று ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்தபோது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் - வட்டுக்கோட்டையில் சம்பவம்...!{படங்கள்}-oneindia news

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}

0
இன்று மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது வீட்டில் […]
மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு..!{படங்கள்}-oneindia news

மருதங்கேணியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு..!{படங்கள்}

0
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று (17) சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில் மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.
கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு திடீர் விசாரணை.-oneindia news

கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு திடீர் விசாரணை.

0
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன். இளைஞர்களிடையே இன நல்லிணக் கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் […]
சர்வதேச அரசியல் ஆய்வாளருக்கும் ரவிகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.-oneindia news

சர்வதேச அரசியல் ஆய்வாளருக்கும் ரவிகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.

0
சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் அவர்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனனுக்கும் இடையில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்றையதினம் (17.03.2024) கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நிலை , சமகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை - மேலும் ஒரு சந்தேகநபர் கைது!-oneindia news

வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

0
தவச்செல்வம் பவித்திரனின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்மாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , […]
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!-oneindia news

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது!

0
இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.-oneindia news

யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.

0
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முக்கிய புள்ளிகள்!-oneindia news

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முக்கிய புள்ளிகள்!

0
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வர்த்தக சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.

RECENT POST