Tag: jaffna news
யாழ்ப்பாணம் சாட்டி கடலில் குளிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணம் சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் சித்த மருத்துவ முகாம்!
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் சித்த மருத்துவ முகாம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகமும், வட வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த மருத்துவ முகாம் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உயர் அதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார். குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன், […]
காணாமல் போன கடற்தொழிலாளர் – தேடுதல் தீவிரம்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று 16/03/2024. அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்
வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்திரெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது. பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வட்டுக்கோட்டை குடும்பஸ்தர் கொலை விவகாரம் – கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு!
வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் அவர்களது கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளே பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர். இதன்போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்களை […]
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024….!
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேச இசை முழங்க அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்களை ஏற்றப்பட்டு, தமிழ் தாய் வாழ்த்து, இசைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியினை முன்னாள் அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு மருத்துவ […]
அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் – உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!
அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன. இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் […]
விக்டோரியா கல்லூரியின் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய வயதில் மூத்தவர்கள்!
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான […]
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் பொறுப்பேற்பு.
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எல்.இளங்கோவன் வடக்கு மாகாண […]
பொங்கி எழும் தமிழ் மக்கள் – நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்! வெடுக்குநாறி தமிழர் சொத்து!