Home Tags Jaffna news

Tag: jaffna news

எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியல்!-oneindia news

எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியல்!

0
எல்லை தாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், […]
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை - கைதனவர்களுக்கு  விளக்கமறியல்!-oneindia news

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை – கைதனவர்களுக்கு விளக்கமறியல்!

0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி […]
யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர்!-oneindia news

யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர்!

0
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எம்.கஜனும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு b.தாருஜனும் தலைமை தாங்கினர். நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்ய, யாழ்ப்பாண இந்துக்கல்லூரி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீர்ர்களான p.ஸ்ரீநிதுசன் மற்றும் p.யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாடினர். ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரரான ஸ்ரீவிதுர்சன் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 12 (33) ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுபர்ணனிடம் […]
யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!-oneindia news

யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!

0
யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 […]
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது - டக்ளஸ்.-oneindia news

வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது – டக்ளஸ்.

0
எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உiயாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை […]
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் - நெடுங்கேணியில் பதற்றம்!-oneindia news

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் – நெடுங்கேணியில் பதற்றம்!

0
வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது. நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக்!-oneindia news

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக்!

0
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக் இன்றையதிம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மத்திய நிலையத்திற்கு இன்று காலை விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் கடமைகளை பொறுப்பேற்பு!-oneindia news

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் கடமைகளை பொறுப்பேற்பு!

0
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எல்.இளங்கோவன் வடக்கு மாகாண […]
இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்!-oneindia news

இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்!

0
யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது.பாரதி, வள்ளுவர், கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றது. இதில் பாரதி இல்லம் 696 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. இல்ல அலங்கரிப்பில் இலங்கை போக்குவரத்து சபையினரின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று விளையாட்டு போட்டியில் அமைக்கப்பட்டிருந்தமை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்த பாரதி இல்லம் அலங்கரிப்பிலும் முதலாம் […]
தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!-oneindia news

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!

0
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிபபாளரும் .சி.சிவபாலா அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிபபழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர். இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் […]

RECENT POST