Home Tags Jaffna news

Tag: jaffna news

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்கள் கைது!-oneindia news

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடித்த 15 இந்திய மீனவர்கள் கைது!

0
இன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், குறித்த மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒளி பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது.-oneindia news

ஒளி பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது.

0
ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று(13)) ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெற்றிலைக்கேணியை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
டக்ளஸ் வெளியிட்ட முக்கிய தகவல்.-oneindia news

டக்ளஸ் வெளியிட்ட முக்கிய தகவல்.

0
வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் – பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் […]
ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு பேச்சாளரின் சொற்பொழிவு!-oneindia news

ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு பேச்சாளரின் சொற்பொழிவு!

0
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் காரைநகர் – ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், சட்டத்தரணி திருமதி.அம்பிகா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த ஊரி கிராமமானது பெண்கள் கடற்றொழில் செய்யும் கிராமமாகவும் பொருண்மியம் நலிவுற்ற கிராமமாகவும் காணப்படுகின்றது. இந்த நிகழ்வின்போது மகளிருக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் தெரிவு செய்யப்பட்ட பெண் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர், உத்தியோகத்தர்கள், காரைநகர் உதவி பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், ஊரி வாழ் பெண்கள் அமைப்புக்கள் என பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.
ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு பேச்சாளரின் சொற்பொழிவு!-oneindia news

ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு பேச்சாளரின் சொற்பொழிவு!

0
ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்று இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் இந்த சொற்பொழிவு இடம்பெற்றது. இந்திய துணைத் தூதரகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இந்த சொற்பொழிவில், தமிழ்நாடு – கல்வி உளவியலாளர், முனைவர் சரண்யா ஜெய்குமார் அவர்கள் பேச்சாளராக கலந்துகொண்டார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை - வெளியான சி.சி.டிவி காட்சி!-oneindia news

இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை – வெளியான சி.சி.டிவி காட்சி!

0
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார். கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் […]
யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.-oneindia news

யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனமுமற்றது - சுரேஷ் பிரேமச்சந்திரன்.-oneindia news

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனமுமற்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.

0
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை எதிர்வரும் அமர்வின் போது கொண்டு வருவதாக இருக்கும் தீர்மானம் எந்தவித பயனும் அற்றது என்றும் ஏற்கனவே சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த கெஹலியவிற்கும் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். எனவே இது போன்ற பிரேரணைகள் நம்பிக்கை அற்றவை பயனற்றவை என சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு.-oneindia news

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரலைக்கான இணைப்பு.

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, நாளை 14ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. பட்மளிப்பு விழா நிகழ்வுகளை பல்கலைக்கழகத்தின் யூரியூப் சனல் மற்றும் முகப்புத்தகம் ஆகிவற்றினூடாக நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இணைக்கப்பட்டுள்ள கீயூ. ஆர் கோர்டை ஸ்கான் செய்வதனூடாக நேரலையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் துணைவேந்தர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பண்ணை கடலினுள் பாய்ந்த பொலிஸாரின் முச்சக்கர வண்டி!-oneindia news

பண்ணை கடலினுள் பாய்ந்த பொலிஸாரின் முச்சக்கர வண்டி!

0
வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி! இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. பொலிஸாரே இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம் செய்யும் நிலையில் பொதுமக்களை எவ்வாறு அவர்கள் நல்வழிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

RECENT POST