Tag: jaffna
Minister Douglas paid a shock go to to the Jaffna Instructing Hospital!
Minister Douglas Devananda visited Jaffna Instructing Hospital at present 29.03.2024.In the course of the stated go to, he mentioned with the members of the...
Jaffna. The matter of the homicide of the younger man! The order...
Jaffna - The courtroom has allowed the police to acquire the phone dialog report of the suspects arrested within the Vattukkottai youth homicide case.
On...
ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன?? – படங்கள் –
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்தன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியது. சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டார். இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த […]
இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்
இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் மோதி விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது – வைத்தியர் எச்சரிக்கை
இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்குச் செல்லும் வாயிலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்றையதினம் வியாழக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல் சோர்வடைந்த நிலையில் குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு […]
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – அமைச்சர் டக்ளஸ் –
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட […]
” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு..
” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ […]
இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்! – படங்கள்-
இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச பத்மநாபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா சகிதம் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களின் மக்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நந்திக் கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்பு உரையை […]